Skip to content

பாமக மகளிர் அணி தலைவியின் கணவர் கொலை… திருப்பத்தூர் அருகே பரபரப்பு

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் அணி தலைவி நூறு நிஷா இவருடைய கணவர் அலி ஜான் என்கிற அந்தோணி (65) இவரும் அதே பகுதியை சார்ந்த கார்த்திக் (50) என்பவரும் திருப்பத்தூரில் உள்ள பிரபல கோல்டன் சூப்பர் மார்க்கெட் என்ற கடையில் செக்யூரிட்டிகளாக பணி புரிந்து வந்தனர்.

அந்தோணி என்பவர் இரவு நேரத்தில் பணி செய்துள்ளார். அவரை மாற்றுவதற்காக கார்த்திகேயன் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கார்த்திகேயன் கல்லை எடுத்து உடலின் மீது போட்டு அந்தோனியை கடுமையாக தாக்கி உள்ளார்.

இதனால் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் காயம் ஏற்பட்ட அந்தோனியை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அந்தோணி உயிரிழந்து உள்ளார்.

இந்நிலையில் தப்பி ஓடிய கார்த்திகேயன் என்ற காவலாளியை திருப்பத்தூர் நகர போலீசார் தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் டூட்டி மாற்றுவதற்காக ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..

error: Content is protected !!