பாமகவை அபகரித்ததாக அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணையை இன்று டில்லி உயர்நீதிமன்ற நீதபதி மனி புஷ்கர்னா முன்பு விசாரணை நடைபெற்றது.
ராமதாஸ் தரப்பு கட்சி உரிமை கோருகிறது என்றால் குறைந்த பட்சம் ஆவணங்களை கொண்டு வர வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவை பெற்று இந்த விவகாரத்தை ராமதாஸ் தரப்பு அணுக வேண்டும். இருதரப்பும் பிரச்சனைக்குரியதாக இருந்தால் வடிவம் A,B யில் இரு தரப்பு கையெழுத்து போடுவதும் ஏற்கப்படாது. ஆவணங்கள் அடிப்படையில்தான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

