அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் வேணாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (34),த/பெ தமிழ்மணி என்பவர் நான்கு வயது பெண் குழந்தையிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளா் நாகவள்ளி, தமிழ்ச்செல்வன்னை கைது செய்து ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைத்தார். இந்நிலையில் தமிழ்ச்செல்வன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க கோரி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் நாகவள்ளி கோரியதன் அடிப்படையில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் பரிந்துரை செய்ததையடுத்து, அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி, தமிழ்ச்செல்வனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் தமிழ்ச்செல்வன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்