கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாலாபேட்டை பகுதியில் அகில இந்திய விவாகத் தொழிலாளர் சங்கத்தினர் மேட்டு மகாதானபுரத்தில் கடந்த மார்ச் 19ஆம் தேதி சம்பூர்ணம் பெண்ணை தாக்கிய சம்பந்தப்பட்ட பூபதி என்ற குற்றவாளி மீது கொலை முயற்சி வழக்குபதிவு செய்யாமல் அவரை தப்பிக்க வைக்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்த லாலாபேட்டை காவல்துறையினரை கண்டித்து ஒன்றிய செயலாளர் தர்மராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இடப் பிரச்சனையில் பெண்ணை தாக்கிய சம்பந்தப்பட்ட குற்றவாளியை கடந்த மார்ச் 27 ஆம் தேதியில் லாலாபேட்டை காவல் நிலையத்தில் இரு தரப்பினரை வைத்து விசாரிக்கும் போது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இருந்தபோதும் லாலாபேட்டை காவல் துறையினர் அவர் மீது உரிய குற்ற வழக்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யாமல் அவரை தப்பிக்க வைக்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து லாலாபேட்டை காவல்துறையினருக்கு எதிராக கண்டன கோஷங்களையும் முழக்கமிட்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிபிஐஎம் மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கண்ணதாசன், மாவட்ட செயலாளர் ராஜு உள்ளிட்டவர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அருகில் இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.