Skip to content

காவலர் தினத்தை முன்னிட்டு… கரூரில் மினி மாரத்தான்..

  • by Authour

குளித்தலையில் காவலர் தினத்தினை முன்னிட்டு காவல்துறை சார்பில் மினி மராத்தான் போட்டி நடைபெற்றது

கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட்டில் செப்டம்பர் 6 காவலர் தினத்தினை முன்னிட்டு குளித்தலை காவல்துறை மற்றும் தனியார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மினி மராத்தான் போட்டி நடைபெற்றது. 15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்கள் மற்றும் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மினி மராத்தான் போட்டியினை குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சிறுவர், சிறுமியர்களுக்கு 3 கிலோமீட்டர் தொலைவும், பெரியவர்களுக்கு 6 கிலோமீட்டர் தொலைவும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆண்கள் பெண்களுக்கு என தனித்தனியாக நான்கு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் உள்ளூர் மற்றும்

வெளியூரை சேர்ந்த சுமார் 150 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த நபர்களுக்கு மெடல்களும், பரிசுத்தொகைகளும் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் மெடல்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்

error: Content is protected !!