வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு பாலியல்
துன்புறுத்தல் ஏற்பட்டு ரயிலில் இருந்து கீழே தள்ளி விடப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அந்த வகையில் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பெண் பயணிகள் மற்றும் குழந்தைகளிடம் பாதுகாப்பான பயணம் குறித்து
இருப்பு பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், ராமநாதன் , தனிப்பிரிவு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ரயில் பயணத்தின் போது ஏற்படும் இடையூறுகளுக்கு ரயில்வே போலீசாரின் இலவச எண்ணான 1512,1098, 139 ஆகியவற்றில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர். தொடர்ந்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
