தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 3,665 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் 2,833 இரண்டாம் நிலை காவலர்கள், 180 சிறைக்காவலர்கள், 631 தீயணைப்பு வீரர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.18,200 – 67,100/- வழங்கப்படும்.
தேர்வர்கள் நாளை முதல் வரும் செப்.21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு வரும் நவம்பர் மாதம் 9 ம் தேதி நடைபெறுகிறது. தேர்வர்கள் தேர்வு அறிவிப்பினை https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.