மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பியின் நான்குசக்கர வாகனம் மாவட்ட காவல் துறையால் பறிப்பு?. சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்தே அலுவலகம் சென்ற டிஎஸ்பி சுந்தரேசன்.
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பியாக சுந்தரேசன் கடந்த நவம்பர் மாதம் முதல் பணியாற்றி வருகிறார். இவர் பொறுப்பேற்றது முதல் மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறார்.
மாவட்ட காவல்கண்காணிப்பாளருக்கும் டிஎஸ்பி சுந்தரேசனுக்கும் அடிக்கடி உரசல் ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் வருகைக்காக டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனத்தை மாவட்ட காவல்துறை கேட்டதற்கு கொடுக்க மறுத்துவிட்டார். மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பந்தோபஸ்து டியூட்டி என்ற பெயரில் வேறு மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டவர் மீண்டும் பணிக்குத் திரும்பிய டிஎஸ்பிக்கு வாகனத்தை வழங்கவில்லை.
இதனால் இரண்டு நாட்கள் பைக்கில் சென்றவர் இன்று நடந்தேத தமது அலுவலகத்திற்கு சென்றார். . மாநில மனித உரிமை கமிஷனில் டிஎஸ்பியாக பணியாற்றிய சுந்தரேசன் காஞ்சிபுரம் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் கொலைவழக்கு, பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான என்கவுன்டர்களில் விசாரணை அதிகாரியான சுந்தரேசன் காவல்துறையினரின் தவறுகளை தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியதால் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. டிஎஸ்பிக்கு வாகனம் வழங்கப்படாதது குறித்து மாவட்ட காவல்துறையில் விளக்கம் கேட்டபோது, அவரது வாகனம் பழுது காரணமாக ரிப்பேர் செய்ய அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.