திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். சதீஷ்குமார் இன்று காலை வழக்கமாக பைக்கில் பணிக்கு சென்றுள்ளார். கூத்தாநல்லூர் பகுதியில் சென்றபோது சாலையில் எதிரே வந்த லாரி சதீஷ்குமார் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், சதீஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைக் மீது லாரி மோதி போலீஸ்காரர் பலி

