கரூரில் நடைபெற துயர சம்பவத்தில் பலியான 41 பேருக்கு பொள்ளாச்சி நகர வடக்கு திமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. கரூரில் தமிழக வெற்றி கழகம் நடத்திய பிரச்சார கூட்டத்தின் போது ஏற்பட்ட அசம்பாவத்தில் குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்தில் பலியானவர்களுக்கு தமிழக அரசு சார்பில் தல 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம்
நடந்த அன்றைய நள்ளிரவு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து கரூர் வந்து இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதலும் கூறினார்.
இந்நிலையில் கரூர் சம்பவத்தில் பலியானவர்களுக்கு பொள்ளாச்சி நகர வடக்கு தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பாக திமு.க. நகர வடக்கு பொறுப்பாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி, மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ், தி.மு.க. கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், ஆனைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் ரெட்டியாரூர் யுவராஜ், நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், துணைத் தலைவர் கௌதமன், நகர துணைச் செயலாளர் தர்மராஜ், நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்டோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி இறந்தவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தினர்.