கோவை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி உள்ள வால்பாறை கவர்கல் காடம்பாறை போன்ற பகுதிகளிலும் இரவு முதல் அதிக அளவில் மழை பெய்து வருகிறது இந்த நிலையில் மிகவும் பிரபலமான சுற்றுலா பயணிகளை கவர்ந்த இடமாக திகழும்

இயற்கை எழில் சூழ்ந்த ஆழியார் கவியருவில் திடீரென இன்று அதிகாலை முதல் காற்றாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது இதனால் நீர் செந்நிறமாக ஆர்ப்பரித்துக் அதிக சத்தத்துடன் கொட்டி வருகிறது இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அருவிக்கு செல்ல வனத்துறை தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும் நீர்வரத்து சீரான உடன் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர் இதனால் அருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஆழியார் வனத்துறை சோதனை சாவடியுடன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வருகின்றனர்.

