கோவை, பொள்ளாச்சி ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது இங்கு யானை காட்டு எருமை பன்றி மற்றும் சிறுத்தை அடிக்கடி வருவதும் அவற்றை வனத்துறை சார்பில் கடந்த வனப்பகுதியில் விரட்டப்படுவதும் தொடர்கதையாக உள்ள நிலையில் நேற்று நள்ளிரவு பொள்ளாச்சி அடுத்த குப்பிச்சிபுதூர் மேட்டுப்பதி ஒடையகுளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி நிஷாந்த் என்பவர் தோட்டத்தின் அருகே சிறுத்தை ஒன்று நடந்து செல்வது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது இதனை பார்த்த விவசாயி அதிர்ச்சி அடைந்துள்ளார் இது குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது மேலும் இப்பகுதி விவசாயிகள் கூறுகையில் இந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

