Skip to content

பொள்ளாச்சி சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 85 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ராமலிங்கம் செளடேஸ்வரி கோயிலில் கடந்த 15 ஆண்டுகளாக, 1008 சங்காபிஷேக விழா நடைபெற்று வருகிறது.
இந்தாண்டிற்கான சங்காபிஷேக விழா இன்று நடந்தது.
இதையொட்டி கோயில் வளாகத்தில் லிங்க வடிவில் 1008 சங்குகள் அமைக்கப்பட்டு அதில் வில்வ

இலைகள், புஷ்பங்களால் அலங்கரிங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடந்தது. பின்னர் மூலவர் ராமலிங்கேஷ்வரர் மற்றும்
செளடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளிட்ட 16 வகையான மூலிகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் தீபாராதனைகளும் நடந்தது.

இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 
இது குறித்து கோயில் நிர்வாகத்தினர் கூறும்போது,
பொதுமக்களின் நலன் வேண்டியும், குழந்தைகள் கல்வி சிறக்கவும் வேண்டி எல்லா சிவலாயங்களில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு 1008 சங்குகளில் நிரப்பி, கலசம் ஆவாங்கனம் செய்து, ராமலிங்கேஷ்வருக்கும்
செளடேஸ்வரி அம்மனுக்கும்
கைலாய வாத்தியத்துடன், 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது என்றனர்.

error: Content is protected !!