Skip to content

பொள்ளாச்சி பாலியல் வழக்கு… சாகும்வரை சிறை- பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஒன்பது பேருக்கும் நீதிபதி நந்தினி தேவி தலைமையிலான அமர்வு அனைவரும் குற்றவாளிகள் என இன்று கோவை மகிளா நீதிமன்றத்தில் தீர்ப்பளித்துள்ள நிலையில். பொள்ளாச்சி பகுதி பொதுமக்கள் அதை வரவேற்றுள்ளனர் மேலும் இந்த வழக்கின் தண்டனை விவரங்கள் மதியம் அறிவிக்கப்பட உள்ள நிலையில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று பொள்ளாச்சி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை சிறை என கோர்ட் அறிவித்தது. மேலும் இந்த தீர்ப்பை வரவேற்கும் விதமாக பொள்ளாச்சி நகர திமுகவினர் சார்பில் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டம்

error: Content is protected !!