கரூர், கோவிந்தம் பாளையத்தைச் சேர்ந்த ஹரிஷ் குமார் (வயது 17) பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார்.
தர்ஷன் (வயது 16) 11 வகுப்பு படித்து வருகிறார். இருவரும் வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளனர் அப்போது கரூர் டூ ஈரோடு சாலையை கடக்க முயன்ற போது ஈரோட்டில் இருந்து அதிவேகமாக வந்த பிரசாத் ஓட்டி வந்த கார் இருசக்கர வாகனத்தில் மீது மோதி தூக்கி வீசப்பட்ட இருவரும் ஹரிஷ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கால்கள் உடைந்த நிலையில் இருந்த தர்ஷன் என்பவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அதிவேகமாக கார் ஓட்டி வந்த கரூர்,மூலிமங்கம் பகுதியை சேர்ந்த பிரசாத் என்பவரை கரூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
