தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி பெறும் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இலவச வேட்டி சேலை மற்றும் முழுக் கரும்பு ஆகியவற்றுடன் ரூ.3000 ரொக்கப்பணம், பொங்கல் பரிசு தொகுப்பாக திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்வில் திமுக வட்ட செயலாளர் செல்வராஜ், அருண்நேரு, காங்கிரஸ் நிர்வாகிகள் பூபாலன், அண்ணாதுரை, அருள், பெரியசாமி, சம்பத், நலச்சங்க நிர்வாகிகள் நாராயணசாமி, ரவி, கெளதம், சரோஜா, ரோஸ்லின், சகிலா, லாவண்யா, ஆதாம், லாரன்ஸ்,சாமிநாதன், சாக்ரடிஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

