Skip to content

பொள்ளாச்சி நகராட்சியில் பொங்கல் வைத்து வழிபாடு

பொள்ளாச்சி நகராட்சியில் தைத்திருநாள் முன்னிட்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்த நகராட்சி தலைவர். பொள்ளாச்சி-ஜன-14 உலகம் முழுவதும் தைத்திருநாள் பொங்கல் முன்னிட்டு கோலப்போட்டி கயிறு இழுக்கும் போட்டி கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் பொள்ளாச்சி நகராட்சி வளாகத்தில் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர் இதில் நகராட்சி ஆணையாளர் குமரன் துணைத் தலைவர் கௌதமன் வார்டு கவுன்சிலர்கள் நகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பொங்கல் வழங்கினர் தைத்திருநாள் பொங்கல் விழா வருவது அடுத்து நகராட்சி ஊழியர்கள் ஒன்றாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!