Skip to content

”டிராகன்” படத்திற்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்… படக்குழுவினர் மகிழ்ச்சி…

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி இருந்த டிராகன் திரைப்படம் இன்று (பிப்ரவரி 21) திரைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதே சமயம் பிரதீப் ரங்கநாதன், அனுபமா, கயடு லோஹர் ஆகியோரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்படுகிறது. dragon

இந்நிலையில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன், அர்ச்சனா கல்பாத்தி, லியோன் ஜேம்ஸ் ஆகியோர் ரசிகர்களுடன் இணைந்து டிராகன் படத்தை பார்த்துள்ளனர். படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில் படக்குழுவினர் அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரதீப் ரங்கநாதன், “இது ஒரு அழகான படம். இந்த படத்தை தந்ததற்கு அஸ்வத்துக்கு நன்றி சொல்கிறேன். இது நல்ல கருத்துள்ள படம். இந்த படத்தை கொடுத்த என் நண்பனுக்கு நன்றி” என்று பேசினார். அவரைத் தொடர்ந்து பேசிய அஸ்வத், “ஏஜி எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரதீப் – அஸ்வத் காம்போவில் மீண்டும் ஒரு புதிய படம் உருவாகும். அடுத்த 3 வருடத்தில் இன்னொரு படம் பண்ணுவோம்” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

error: Content is protected !!