Skip to content

அரியலூர் அருகே மின் கசிவு காரணமாக கோழிப்பண்ணை செட் தீக்கிரை…

அரியலூர் மாவட்டம் வல்லாக்குளம் கிராமத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக 10 லட்சம் மதிப்புள்ளான கோழிப்பண்ணை செட் எரிந்து தீக்கரையாளதால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் வல்லக்குளம் கிராமத்தில் கடந்த 20 தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் ஏற்பட்ட மின்னழுத்த வேறுபாடு காரணமாக சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் ஃபேன் மிக்ஸி கிரைண்டர் டிவி பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சார சாதனங்கள் வெடித்து பழுது ஏற்பட்டது. இதனால் ஒவ்வொருவர் வீட்டிலும் சுமார் 20,000 மதிப்பிலான மின்சார வீட்டு உபயோக சாதனங்கள் பழுதடைந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் பல வருடங்களாக கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். நேற்று தனது கோழிப்பண்ணைகள் அமைத்துள்ள மூன்று ஷெட்டுகளில் ஒரு செட்டை சுத்தம் செய்து புதிதாக கோழிகளை வாங்கி தயார் செய்வதற்காக பணிகள் ஈடுபட்டிருந்தார். நள்ளிரவில் மின் கசிவு காரணமாக திடீரென அந்த செட் தீ பற்றி எரிந்தது. அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் உடனடியாக வந்து தீயை கட்டுப்படுத்தியதால் மற்ற இரண்டு செட்களும் அதில் இருந்த கோழிக்குஞ்சுகளும் உயிர்தப்பின. அரியலூரில் தீயணைப்பு நிலையத்திலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு மின் கசிவு காரணமாக வீடுகளில் இருந்த மின்சார உபயோக பொருள்கள் எரிந்து பொதுமக்களுக்கு சேதம் ஏற்பட்ட நிலையில், தற்பொழுது 10 லட்சம் மதிப்பிலான கோழிப்பண்ணை செட் மின்கசிவு காரணமாக எரிந்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தங்களது பகுதிக்கு வரும் மின்சார அழுத்த வேறுபாடு உடனடியாக சரி செய்ய இது தர வேண்டும் என்று வல்லக்குளம் கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

error: Content is protected !!