திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம். 110/33-11 கி.வோ.பூவாளூர் துணை மின் நிலையத்தில்,மாதாந்திர பராமரிப்பு பணி 29.10.2025 அன்று காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளப்பட விருப்பதால், இத்துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலால்குடி நகர பகுதியில் இலால்குடி அரசு பொது மருத்துவமனை, நாகம்மையார் தெரு,ராஜேஸ்வரி நகர், சாந்தி நகர், பூவாளூர் பின்னவாசல், தென்கால், மணக்கால், கொப்பாவளி, வழுதியூர், நடராஜபுரம், படுகை, மேட்டங்காடு, ஆதிகுடி, கொன்னைக்குடி, சாத்தமங்களம், ஆனந்திமேடு, அன்பில், கீழ் அன்பில், ஜங்கமாராஜபுரம், மங்கம்மாள்புரம், குறிச்சி, பருத்திகால், அம்மன் நகர், காட்டூர்,இராமநாதபுரம், கொத்தமங்களம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி, வெள்ளனூர், பெருவளநல்லூர், இடக்கிமங்களம், நஞ்சைசங்கேந்தி, புஞ்சைசங்கேந்தி மற்றும் இருதயபுரம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர் மு.கணேசன் தெரிவித்துள்ளார்.
திருச்சி-லால்குடியில் 29ம் தேதி மின்தடை
- by Authour

