திருச்சி கம்பரசம்பேட்டை 110 கி.வோ . துணைமின் நிலையத்தில் 04.03.2026 (புதன் கிழமை) காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் அவசர கால மின்விசை மாற்றி பழுது நீக்கும் பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் இத்துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் சத்திரம் பேருந்து நிலையம், பாலாஜி அவென்யூ, V.N. நகர், பாலகிருஷ்ண நகர், வாணப்பட்டறை, பெரியார் நகர், ஜெயராம் நகர், ஹவுசிங் யூனிட், சாலை ரோடு, சோழராஜபுரம், முதலியார் தெரு, காமாட்சி அம்மன் கோவில் தெரு, வாத்துக்காரத் தெரு, காவேரி நகர், வடிவேல் நகர், பஞ்சவர்ண சுவாமி கோவில் தெரு, டாக்கர் ரோடு, மின்னப்பன் நகர், மீன்மார்கெட், கம்பரசம்பேட்டை, முருங்கைப்பேட்டை, கூடலூர், முத்தரசநல்லூர், பழூர், கலெக்டர்வெல் குடிநீரேற்று நிலையம். பொன்மலை குடிநீரேற்று நிலையம், HAPP குடிநீரேற்று நிலையம் ஆகிய பகுதிகளில் 04.03.2026 (புதன் கிழமை) காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்செயற்பொறியாளர் கா.முத்துராமன் தெரிவித்துள்ளார்.

