புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பனம்பட்டி கிராமத்தில் ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து கொள்ளும் பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு, பயிற்சி கையேடு மற்றும் மண் வள அட்டை வழங்கப்பட்டது. அன்னவாசல் வேளாண் உதவி இயக்குனர் ராஜசேகரன் தலைமை வகித்து துவக்கி வைத்து பேசினார். துணை இயக்குனர் ஜெயபாலன், வேளாண் உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, வேளாண் அலுவலர் முகமதுரபி உள்ளிட்டோர் பேசினர். சக்திவேல்,ரவாப்ராஜா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
