Skip to content

கோவை அருகே விருந்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சாமி திருவீதி உலா

கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் பிரதோசம் விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் அருள்தரும் விஸ்வநாயகி அம்பிகை உடனமர் அருள்மிகு விருந்தீஸ்வரர் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளாக பக்த்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

சுமார் 1000 வருடங்களுக்கு மேல் பழமையான கோவை துடியலூரை அடுத்துள்ள வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷம் விழா விமர்சையாக நடைபெற்றது.

முதலில் பெரிய நந்திக்கும் பின்னர் சிவனுக்கு சிறப்பு அபிசேக பூஜைகள் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் நந்திக்கு பால், தயில், இளநீர், மஞ்சள், சந்தனம், திருநீர் உள்ளிட்டவைகளால் அபிசேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து விருந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிசேக அலங்கார பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் அருள்தரும் விஸ்வநாயகி அம்பிகை உடனமர் அருள்மிகு விருந்தீஸ்வரர் சுவாமி திருவீதி உலா, கோவிலை சுற்றி நடைபெற்றது. இதில் இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையில் வடமதுரை, துடியலூர், பன்னிமடை, பழனிகவுண்டன்புதூர், பூச்சியூர், தொப்பம்பட்டி, நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து திரளான பக்த்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் பி.வி.மணி தலைமை வகித்தார். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அம்சவேணி பழனிச்சாமி, சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தயாநிதி குருக்கள் தலைமையில் சிவனடியார்கள் இறைவனுக்கு அபிசேக, அலங்கார பூஜைகளை செய்தனர். இதில் துடியலூர் காவல்நிலைய போக்குவரத்து உதவி ஆய்வாளர் துரை அவர்களது குடும்பத்தினர் பிரதோச பூஜைகளுக்கு ஏற்பாடு செய்தனர். இந்நிகழ்வில் காசியில் இருந்து காசியோகி யோகிராஜ்பாபா சிறப்பாளராக கலந்து கொண்டார்.

மேலும் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஆர்.டி.ஒ பழனிச்சாமி, அசோகன், வேல்முருகன், சேகர், வேலுச்சாமி, ஏ வி எம் வேல்முருகன், வெள்ளகிணர் செல்வகுமார், ரவிச்சந்திரன், தணிகைசெல்வன், மோகன சுந்தரம், விஜயகுமார், பாபு, காளிதாஸ், ஜெயபால், ராஜ்கண்ணன், சுரேஷ், சண்முகசுந்தரம், மனோகரன், விஜயகுமார், ஆடிட்டர் கிரன் ஸ்ரீ, சஷ்டி குழு ஜெயக்கொடி, கலா உட்பட பலர் செய்திருந்தனர்.

error: Content is protected !!