உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.
இந்தியாவின் முன்னணி செஸ் வீரராக வலம் வருபவர் தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா. இவர் தற்போது அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்றுவரும் Rapid செஸ் போட்டியில் விளையாடிவருகிறார். போட்டியின் நான்காவது சுற்றில் உலகின் நம்பர் 1 செஸ் வீரர் கார்ல்சனை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தார் பிரக்ஞானந்தா.