பாலியல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன்பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதித்து பெங்குளூரு நீதிமன்றம பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், கர்நாடக முதல் அமைச்சர் குமாரசாமியின் அண்ணன் மகனுமான ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்று எழுந்தது.
தனது வீட்டில் பணி செய்த பெண் உள்பட பலரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று பிரஜ்வல் ரேவண்ணா இந்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
