Skip to content

தமிழ்நாடு டிஜிபி பதவி: பிரமோத்குமார் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

தமிழ்நாடு  சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருக்கும்  சங்கர் ஜிவாலின் பதவிகாலம் வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன் புதிய டிஜிபி தேர்வு செய்யப்பட வேண்டும்.  புதிய டிஜிபி  செப்டம்பர் 1ம் தேதி பதவி ஏற்பார்.  தமிழக அரசின் சார்பில் டிஜிபி தேர்வுக்கான  பட்டியல் தயாரிக்கப்பட்டு  மத்திய அரசி்ன் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தொகிறது.

இந்த நிலையில் தமிழக போலீசில்  மூத்த அதிகாரியும், டிஜிபி அந்தஸ்தில் உள்ளவருமான பிரமோத்குமார்,  உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில்  மூத்த அதிகாரியான நான் வரும் செப்டம்பரில் ஓய்வு பெற இருக்கிறேன்.  எனவே டிஜிபி தேர்வில் எனதுபெயரையும் சேர்த்து பரிசீலிக்க வேண்டும் என கோரி இருந்தார். மனுவை விசாரிதத தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு, புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள டிஜிபிக்கள்  பதவி ஏற்கும் நாளில் இருந்து 6 மாதத்திற்குள் ஓய்வு பெறுகிறவராக இருக்க கூடாது என்ற விதி உள்ளது. எனவே உங்கள் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

 

error: Content is protected !!