75 ஆண்டுகளைக் கடந்து தன் அரசியல் பயணத்தை மேற்கொள்ளும் திமுகவுக்கு பக்கபலமாக இருப்பது இளைஞரணி என்று தொண்டர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று இருக்கிறார். இளைஞரணி நிர்வாகிகளின் சந்திப்பு நாளை திருவண்ணாமலையில் நடக்கும் நிலையில் திமுக இளைஞரணியின் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் நடைபெறுகிறது.
வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு
29 கழக மாவட்டங்கள்,91 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 1,30,329 கிளை-வார்டு நிர்வாகிகள் இந்த வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பில் பங்கேற்கிறார்கள்.
5000+ பேருந்து & வாகனங்களை நிறுத்துவதற்கான இடத்துடன் 135 ஏக்கர் அளவில் நிகழ்ச்சி நடைபெறும் திடல் அமைந்துள்ளது. வருகை தரும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு புகைப்படம் மற்றும் பெயருடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் அமர்வதற்கு என்று தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதை ஒழுங்குபடுத்துவதற்கு மேற்கு, தெற்கு, டெல்டா மண்டலங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் தன்னார்வலர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
தி.மு.கழக வரலாற்றை விளக்கும் வரலாற்று புகைப்பட கண்காட்சியும்
கழக முன்னோடிகள் பற்றிய குறிப்புகள் அடங்கிய புகைப்பட கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.
கழக இளைஞர் அணியின் 45 ஆண்டு கால பயணத்தை விளக்கும் புகைப்படங்களின் அணிவகுப்பு இடம்பெறுகிறது.
வாசிப்பை இளம் தலைமுறைக்கு கடத்த ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ உட்பட 27 புத்தகங்கள் அடங்கிய முத்தமிழறிஞர் பதிப்பக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது (10% தள்ளுபடி விலையில் புத்தகங்களைப் பெறலாம்)
வருகை தரும் அனைவருக்கும் 7 வகையான நொறுக்குத்தீனிகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.
எல்லோருக்கும் தண்ணீர் பாட்டில் மற்றும் தன்னார்வலர்களிடம் தண்ணீர் பாட்டில் என்று தடையற்ற தண்ணீர் விநியோகம்.
1000 மொபைல் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மருத்துவ வசதிக்காக மினி கிளினிக் மற்றும் தீயணைப்பு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வருகை தரும் அனைவருக்கும் நிகழ்ச்சி முடிந்தபிறகு இரவு உணவுப்பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன.
தி.மு.கவின் சிறப்பை விவரிக்கும் ‘தொடரும் திராவிடம்’ மேடை நாடகம் நடத்தப்படுகிறது.
SIR பணிகள் குறித்து விரிவாக விளக்கி பேச இருக்கிறார் என். ஆர். இளங்கோ.
social media-வின் அவசியத்தை வலியுறுத்தி பேசுகிறார் சூர்யா கிருஷ்ணமூர்த்தி.
இளைஞர் அணியின் பணிகள் மற்றும் கழக வரலாறு குறித்து புதிய Dravidian Stock-களுக்கு எடுத்துக்கூறி ஆ. இராசா உரையாற்றுகிறார்.
கழக இளைஞர் அணி செயலாளர் தலைமை வகித்து தலைமையுரை.
கழகத் தலைவர் அவர்கள் பங்கேற்று சிறப்புரை.

