ஜனாதிபதி திரவுபதி முர்மு இம்மாதம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கேரளா செல்லும் அவர், வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் கோட்டயம் குமரகத்தில் தங்கி இருப்பார் . ஜனாதிபதியின் வருகையை ஒட்டி, சபரிமலை தேவசம் போர்டும் அம்மாநில போலீசாரும் முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சபரிமலையில் மே 18, 19-ம் தேதிகளில் பக்தர்களுக்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனத்திற்காக சபரிமலை வருவதை ஒட்டி ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு இந்திய ஜனாதிபதி ஒருவர் வருவது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.