Skip to content

நாளை குடியரசு தலைவர் தமிழகம் வருகை… டிரோன்கள் பறக்க தடை

  • by Authour

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, செப்டம்பர் 2ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, செப்டம்பர் 3ஆம் தேதி விமானம் மூலம் திருச்சி செல்கிறார். பின்னர் திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

இதனை தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் திருச்சிக்கு செல்லும் திரௌபதி முர்மு ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். இதனை அடுத்து திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். குடியரசு தலைவரின் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

error: Content is protected !!