முன்விரோதத்தில் இரு தரப்பினர் மோதல்
திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினர் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. முன் விரோதத்தை சமாதானம் பேசுவதற்காக அங்காயி கோயில் பகுதிக்கு இரு தரப்பினரும் வருமாறு கூறினர்.இருதரப்பினரும் வந்த இடத்தில் மன்னிப்பு கோருவதாக கூறும்போது பின்னர் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.இதில் இரு தரப்பைச் சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இது சம்பந்தமாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஓய்வு ஆசிரியையை சரமாரிய தாக்கிய மகன்
திருச்சி பொன்மலைப்பட்டி வ.உ.சி தெருவை சேர்ந்தவர் யூஜின் . இவரது மனைவி ரோஸ் சாந்தி ( 61). ஓய்வு பெற்ற ஆசிரியை. குடும்பத்த தகராறில் இவரது மகன் லியாண்டர் லயோலா . இவர் கத்தி முனையில் மிரட்டி தாயை தாக்கியதாக கூறப்படுகிறது.இது குறித்து ரோஸ் சாந்தி அளித்த புகாரின் பெயரில் லியாண்டர் லயோலா மீது பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார்.

