திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு கிராமத்தில் மேல் தெரு, கீழ் தெரு என இரண்டு தெருக்கள் உள்ளது. இந்த நிலையில் மேல் தெரு பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் மதன்குமார் (19) என்ற வாலிபர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கீழ் தெரு பகுதிக்கு சென்று அங்கு தனது நண்பனின் பிறந்த நாள் விழாவை கொண்டாடியுள்ளார் இந்த நிலையில் அங்கு இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக

கூறப்படுகிறது. இதன் காரணமாக மதன்குமார் மீது கீழ் தெரு பகுதியை சார்ந்த வாலிபர்கள் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து நேற்று இரவு அந்த வழியாக சென்ற மதன் குமாரை கீழ் தெரு பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் வழிமறித்து தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது அதன் பின்னர் கைகலப்பாக மாறியதில் மதன்குமாரை வாலிபர்கள் சுத்துப்போட்டு சாரா மாறியாக தாக்கி உள்ளனர்.
இதனால் காயமடைந்த மதன்குமார் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் மதன்குமாரை தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் இந்த சம்பவம் குறித்து குரிசிலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

