Skip to content

திருவனந்தபுரம் வெற்றிக்கு பிரதமர் மோடி நெகிழ்ச்சி

கேரள உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில், கேரளாவில் ஆளும் இடதுசாரிகள் ஜனநாயகக் கூட்டணிக்கு பலத்த அடி விழுந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. இருப்பினும், தலைநகர் திருவனந்தபுரத்தில் பாஜகவே வெற்றி பெற்றது.

திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றிபெற்ற நிலையில், பிரதமர் மோடி நன்றி தெரிவித்து, “கேரள மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த கேரள மக்களுக்கு எனது நன்றி.

கேரளத்தில் யுடிஎஃப் மற்றும் எல்டிஎஃப் ஆகியவற்றால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். ஆகையால், நல்லாட்சியை வழங்கவும், அனைவருக்கும் வாய்ப்புகளைக் கொண்ட கேரளத்தை உருவாக்கவும் ஒரே வழி தேசிய ஜனநாயகக் கூட்டணி மட்டுமே என்று மக்கள் தீர்மானித்தனர். திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக – தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த வெற்றி கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை தருணம்.
மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை பாஜகவால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். திருவனந்தபுரத்தின் வளர்ச்சியை நோக்கி எங்கள் கட்சி பாடுபட்டு, மக்களின் வாழ்க்கையை எளிதாக்க ஊக்குவிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!