Skip to content

கைதிகளுக்கு கஞ்சா சப்ளை… சிறைக்காவலர் சஸ்பெண்ட்

திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்து செல்லும் போதும், உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பு வழங்கும்போதும் வெளி நபர்கள் மூலமாக கஞ்சா கைமாற்ற சிறைக் காவலர் அன்பரசு உதவி செய்து அவரே வாங்கி வைத்துக்கொண்டு கைதிகளுக்கு விற்பனை செய்துள்ளார்.
சமீபத்தில் வெளியே சென்று வந்த கைதி மூலமாக வாங்கி வந்த கஞ்சாவை சிறைக்காவலர் அன்பரசு பைக்கில் மறைத்து வைத்திருந்தார். இதுகுறித்த சிறை அதிகாரிகள் சோதனையின்போது அன்பரசு சிக்கிக்கொண்டார். இது தொடர்பாக மதுரை சிறை எஸ்.பி., சதீஷ்குமார் கைதிகளிடம் விசாரணை நடத்தினார் அதில் கஞ்சாவை வெளியிலிருந்து வாங்கி வர சிறை காவலர் அன்பரசு ஐடியா கொடுத்ததும், அவரே சிறைக்குள் கஞ்சா விற்பனை செய்ததையும் கைதிகள் கூறினர். இதைதொடர்ந்து சிறை காவலர் அன்பரசை சஸ்பெண்ட் செய்து சிறை எஸ்.பி. சதீஷ்குமார் உத்தரவிட்டார்.

error: Content is protected !!