Skip to content

தனியார் வங்கி மேனேஜர் தற்கொலை… திருச்சியில் பரிதாபம்

திருச்சி ஏர்போர்ட் கல்யாணசுந்தர நகரை சேர்ந்த மகாலட்சுமி (22)என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (34) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் ஏற்பட்டது. இதையடுத்து இரு வீட்டாரின் பெற்றோரின் சம்மதத்துடன், மகாலட்சுமி கடந்த ஜூன் 8-ந் தேதியன்று மணிகண்டனைத் திருமணம் செய்துகொண்டார். பிறகு மணிகண்டன் கே.கே. நகரில் உள்ள தனியார் வங்கியில் ரிலேஷன்ஷிப் மேனேஜராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் மணிகண்டன் தனது திருமணம் மற்றும் வீட்டுப் புனரமைப்புக்காகக் கடன் வாங்கியிருந்தார். பிறகு மணிகண்டனால் கடன் வாங்கியத்திற்கு மாதாந்திரத் தவணைத் தொகையைச் செலுத்த முடியவில்லை. மேலும் குடும்ப செலவு செய்யவும் பணம்இல்லாமல் சிரமப்பட்டு வந்தார். முறையாக நடத்தவில்லை, மேலும் தன்னை நம்பி வந்த மனைவியையும் அவரால் சரியாகக் கவனித்துக்கொள்ள முடியவில்லை.

இதனால் விரக்தியில் இருந்த மணிகண்டன் சம்பவத்தன்று அதிகாலை 2 மணியளவில், தனது வீட்டின் மாடியில் இருந்து குதித்துதற்கொலை முயற்சி செய்தார் அப்பொழுது அருகில் உள்ள மின்சாரக் கம்பி மீது விழுந்துகீழே விழுந்தார்.இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மணிகண்டன் உடனடியாக, அவர் . சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு பணியில் இருந்த மருத்துவர் அவரைப் பரிசோதித்து, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தார். இது குறித்து மகாலட்சுமி ஏர்போர்ட் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் இந்திரா காந்தி விசாரணை நடத்தி வருகிறார்.

error: Content is protected !!