Skip to content

பிரச்சனைகள் 4 நாட்கள் இருக்கும் பின்னர் சரியாகிவிடும் – ராமதாஸ்

பாமகவில் நிலவும் மோதல் போக்கு தொடர்பான கேள்விக்கு, காத்திருப்போம், காத்திருப்போம் காலங்கள் வரும் என பாடல் பாடி ராமதாஸ் நகைச்சுவையாக பதிலளித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸிற்கும், கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையேயான மோதல் போக்கு நீடித்துவருகிறது. முன்னதாக தான் தான் கட்சியின் தலைவர் மற்றும் நிறுவனர் என்றும், என் மூச்சு உள்ளவரை நானே பதவி வகிப்பேன் என்றும் ராமதாஸ் திட்டவட்டமாக கூறிவிட்டார். இதன் தொடர்ச்சியாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை நீக்கி அறிவிப்பு வெளியிட்டார் ராமதாஸ். கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் இல்லாமல் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவும் செல்லாது என அன்புமணி தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராமதாசிடம் பாமகவில் நிலவும் மோதல் போக்கு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, காத்திருப்போம், காத்திருப்போம் காலங்கள் வரும். மோதல் போக்கு நான்கு நாள் இருக்கும், பின்னர் சரியாகி விடும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், திருமண நிகழ்வில், அன்புமணியும், ஜிகே மணியும் சந்தித்து கொண்டது சந்தோசம், நான் மிகவும் சந்தோசமாக உள்ளேன்” என்றார்.

error: Content is protected !!