Skip to content

திருச்சி போலீஸ் ஸ்டேசன்களில்-10 பேர் எஸ்ஐ-ஆக பதவி உயர்வு

  • by Authour
திருச்சி மாநகர காவல் நிலையங்களில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 10 பேர், உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்று பணியமர்த்தப்பட்டுள்ளனர். அந்த வகையில், தில்லைநகர் காவல் நிலைத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய ரவிச்சந்திரன் அதே காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதுபோல கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஜவகர் கே.கே.நகர் காவல் நிலையத்திலும், ஸ்ரீரங்கத்திலிருந்த பாஸ்கரமூர்த்தி அதே காவல் நிலையத்திலும் , அரியமங்கலத்தி லிருந்த சந்துரு காந்தி மார்க்கெட் காவல் நிலையத்துக்கும் , கே கே நகரிலிருந்த சந்தான கிருஷ்ணன் விமான நிலையம் காவல் நிலையத்துக்கும், அரசு மருத்துவ மனையிலிருந்த தாயுமானவன் அரியமங்கலத்துக்கும், எமடலைப்பட்டி புதூரிலிருந்த வாசு கோட்டைக்கும், நீதிமன்றக்காவல் நிலையத்திலிருந்த விட்டல்சிங் அதே காவல் நிலையத்திலும், உறையூரிலிருந்த குமரவேல் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திலும், அந்த காவல் நிலையத்திலிருந்த வெங்கட்ராமன் கண்டோன்மென்ட் காவல் நிலையத்துக்கும் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றத்துடன் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முன்னதாக இவர்களுக்கு சுமார் 3 மாதம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை மாநகரகமிஷனர்  காமினி வெளியிட்டுள்ளார்.
error: Content is protected !!