மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் கரூரில் நடைபெற்றது.
கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு கரூர் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்..இந்தப் போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி கருர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் செய்தனர் மறியல் செய்த 100க்கும ஏற்பட்டவர்களை போலீசார் கைது அழைத்து சென்றனர்.

