Skip to content

அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து… கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரான் நாட்டின் உச்சத்தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காமேனி அவர்கள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகளால் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டதைக் கண்டித்து, கோவை மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை உக்கடம் பகுதியில் உள்ள வள்ளியம்மை பேக்கரி முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். “அடக்குமுறைக்கு எதிராக ஒன்றுபடுவோம்! உலக அமைதிக்காக குரல் கொடுப்போம்!” என்ற

முழக்கத்துடன், பதாகைகளை ஏந்தியபடி போராட்டக்காரர்கள் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தை கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து ஜமாஅத்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு முன்னின்று நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு சிறப்பம்சமாக, ஏராளமான இஸ்லாமியப் பெண்களும் இதில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. திரளான பெண்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து இந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் இனாயத்துல்லா ஷாஜியார், சுல்தான் அமீர், சபீர் அலி, கோவை சயத், அப்துல் ரஹ்மான் உலூமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!