தஞ்சாவூர்: மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தஞ்சாவூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு திட்ட தலைவர் அதிதூத மைக்கேல் ராஜ் தலைமை வகித்தார். திட்ட செயலாளர் காணிக்கை ராஜ் முன்னிலை வகித்தார். சி ஐ டி யு மாவட்ட தலைவர் ஜெயபால், திட்டப் பொருளாளர்கள் முனியாண்டி, மணிவண்ணன் மற்றும் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு மின்வாரியத்தில் உள்ள மின் விநியோகம் ஆனால் புனல் காற்றாலை மின் உற்பத்தி நீர் மின் உற்பத்தி பொது கட்டுமான வட்டம் ஆகிய பகுதிகளில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிர்வாகமே நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி தோஷங்கள் எழுப்பப்பட்டன. மறியல் போராட்டத்தில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.