Skip to content

தொடர் வழக்கறிஞர்கள் படுகொலையை கண்டித்து.. கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Authour
கரூர் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்களின் தொடர் படுகொலையை கண்டித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் மாரப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த வாரத்தில் இரண்டு வழக்கறிஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் இதனை கண்டிக்கும் விதமாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். சட்டத்தை அமல்படுத்த தாமதித்தால் விரைவில் சென்னை கோட்டை நோக்கி பேரணி நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர். இதேபோல் கரூர் மாவட்டத்தில் காவல் நிலையங்களில் வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் போலி வழக்கறிஞர்கள் உலா வருவதாகவும், பார் கவுன்சிலில் பதிவு செய்யாத நபர்களுக்கு வழக்கறிஞர்கள் என்ற தகுதி இல்லை என தெரிவித்தனர்.
error: Content is protected !!