இஸ்ரேலுக்கு எதிராக அனைத்து மாநில அரசுகளும் தீர்மானம் இயற்றி ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வக்பு சொத்துகளை அபகரிக்க துடிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் மாவட்ட தலைவர் சமயபுரம் உமர் தலைமையில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் தாவுத் கைஸர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய அரசின் வக்பு சட்டத்தை கண்டித்து அதை முழுமையாக தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சம்சுதீன், கனி, அமானுல்லா, இக்பால், ஷர்புதீன், அன்சர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநிலச் செயலாளர் சபீர் அலி
முஸ்லிம்களின் வக்பு சொத்துகளை சூறையாடும் நோக்கத்தில் கொண்டு வந்த புதிய வக்பு சட்டத்தை நீதிமன்ற ரத்து செய்ய வேண்டும்.
மேலும், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமலான அமர்வில் வக்பு சட்டம் தொடர்பான விசாரணையில் வக்பு சட்டத்தை முழுமையாக தடை செய்ய முடியாது என்று தெரிவித்து ஒரு சில விஷயங்களுக்கு மட்டுமே இடைக்கால தடை விதித்துள்ளார்.
இஸ்லாத்தை ஏற்று ஐந்து ஆண்டு கடைபிடிக்கிறாரா என்று பார்க்க வேண்டும் என கூறியுள்ளது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளாரா என்று பார்க்கலாம். கடைப்பிடிக்கிறார் என பார்க்க வேண்டும் என்ற ஒரு சட்டத்தை நீதிமன்றம் கொடுத்துள்ளது. இதே போன்ற தீர்ப்பை மற்ற மதங்களுக்கு வழங்குவார்களா. இந்துக்கள் கடைப்பிடிக்கிறார்களா என்று தீர்ப்பு வழங்குவார்களா இப்படி ஒரு முரண்பட்டை தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
மேலும் முஸ்லிம் அல்லாதவர்களின் பங்களிப்பு மூன்றை தாண்டக்கூடாது என்று கருத்து கூறி முஸ்லிம்களின் வக்பு சொத்து முஸ்லிம் அல்லாதவர்களின் பங்களிப்பை உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.
இக்கருத்தானது மத்திய அரசு வருடி கொடுப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.
வக்பு சொத்தை சூறையாடும் ஒன்றிய அரசின் புதிய சட்டத்தை முழுமையாக தடை விதிக்க வேண்டும்.
இஸ்ரேல் பாலிஸ்தீனத்திற்கு எதிராக தாக்குதலை நடத்திக் கொண்டு வருகிறது. எந்த ஒரு போர் நடவடிக்கைகளும் கடைபிடிக்காமல் செயல்படுகிறது. இஸ்லாமியர்களை இன அழிப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறது.
தமிழக முதல்வர் இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானத்தை இயற்ற வேண்டும், ஒவ்வொரு மாநில அரசும் ஒன்றிய அரசுக்கு இதுபோன்ற தீர்மானத்தை இயற்றி அழுத்தம் கொடுத்து இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.