Skip to content

தபால் நிலைய இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: பொள்ளாச்சி வடுகபாளையத்தில் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்

பொள்ளாச்சியை அடுத்த வடுகபாளையம் பகுதியில் 2,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் கடிதப் பரிமாற்றம் மற்றும் சேமிப்புக் கணக்கு போன்ற பணப் பரிவர்த்தனைகளுக்காகப் பல ஆண்டுகளாக இங்குத் தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தத் தபால் நிலையத்தை இங்கிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மகாலிங்கபுரம் பகுதிக்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்தத் தகவலை அறிந்த வடுகபாளையம் பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த இடமாற்றத்தைக் கண்டித்தும், தபால் நிலையம் தொடர்ந்து வடுகபாளையம் பகுதியிலேயே செயல்பட வேண்டும் என வலியுறுத்தியும் இன்று தபால் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்குக் சுமார் 2.5 கோடி ரூபாய்க்கும் மேல் பணப் பரிவர்த்தனை மற்றும் ஏராளமான சிறுசேமிப்புக் கணக்குகள் உள்ள நிலையில், தபால் நிலையத்தை மாற்றினால் முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.

error: Content is protected !!