Skip to content

பொதுத்தேர்வு: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 1 மணி நேரம் கூடுதல் சலுகை

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வு துறை இயக்குநர் க.சசிகலா அனுப்பிய சுற்றறிக்கையில்: பொதுத்தேர்வு எழுதும் மாற்று திறனாளி மாணவர்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக ஒரு மணி நேரம் சலுகை வழங்கப்பட் டுள்ளது.
அதேநேரம் அந்த மாணவர்கள் கூடுதல் ஒரு மணி நேரம் சலுகையை பயன்படுத்த விரும்பவில்லை எனில் அதற்கு அனுமதிக்க வேண்டும்.

அதாவது, வழக்கமான தேர்வு நேரமான 3 மணி நேரம் (காலை 10.15 முதல் மதியம் 1.15 மணி வரை) முடிந்த பின்னர் மாற்று திறனாளிகள் தங்கள் விருப்பத்தின்படி தேர்வு அறையை விட்டு செல்லலாம். அதற்கான படிவத்தில் பூர்த்தி செய்து கையொப்பமிட வேண்டும்.
அந்த படிவங்களை தொகுத்து அனைத்து தேர்வுகளும் முடிந்ததும், சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்வு துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க முதன்மை கண் காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

error: Content is protected !!