Skip to content

மணப்பாறை முறுக்குக்கு புவிசார் குறியீடு இலட்சினை வெளியிடு..

தஞ்சாவூரில் சுலோச்சனா – பன்னீர்செல்வம் அறிவுசார் சொத்துரிமை விவசாயம் மற்றும் கிராம புற மேம்பாடும் மையம் சார்பில், மணப்பாறை முறுக்குக்கு புவிசார் குறியீடு பெற்று கொடுத்தன், அடுத்த கட்ட நிகழ்வாக அதற்கான இலட்சினை (logo) வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் ப.சஞ்சய்காந்தி வெளியிட மணப்பாறை முறுக்கு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் சேகர் பெற்றுக் கொண்டார்.
மணப்பாறை முறுக்கு திருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக புவிசார் குறியீடு பெற்ற பொருளாகும். இதற்காக 2014-ம் ஆண்டு விண்ணபிக்கப்பட்டு 2023ல் புவிசார் குறியீடு பெறப்பட்டது. தற்போது அதற்கான தனி இலட்சினை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி மணப்பாறை முறுக்கு பொட்டலங்களில் இந்த இலச்சினை ஸ்டிக்கர் மூலம் ஒட்டப்படுவதால், பொதுமக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். இதனால் மணப்பாறை முறுக்குக்கு பாரம்பரிய தயாரிப்பாளருக்கு விற்பனை அதிகரிக்கும், உரிய விலை கிடைக்கும். இந்த பெயரையோ, முத்திரையையோ யாரேனும் தவறாக பயன்படுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியாவில் இதுவரை 692 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 69 பொருட்களில் 55 பொருட்களுக்கு நான் பெற்றுக் கொடுத்துள்ளேன். தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. விரைவில் தஞ்சாவூர் சீரக சம்பா, தஞ்சாவூர் கண்ணாடி பொருட்கள், திருவாவடுதுறை சீவாலி உள்ளிட்ட ஐந்து பொருட்களுக்கு கிடைக்க உள்ளது என்றார்.

error: Content is protected !!