புதுக்கோட்டை நகர காவல் நிலையத்துக்கு உட்பட்ட மேல ராஜா வீதியில் பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்கு முன்பாக பூமிக்கு அடியில் புதைத்திருக்கும் கேபிள் காப்பர் வயர்களை பிஎஸ்என்எல் பணியாளர்கள் போல் பணி செய்து, அதை தோண்டி பழுது பார்ப்பது போல் அதில் உள்ள காப்பர் வயர்களை திருடுவதை வழக்கமாகக் கொண்ட தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இராமியம்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரகாசம் மகன் சூர்யா மற்றும் காத்தவராயன் மகன் செல்லதுரை குப்புசாமி மகன் மணிகண்டன் பிரகாஷ் மகன் மகேந்திரன் சேட்டு மகன் மணிகண்டன் வெங்கடேசன் மகன் சின்னதுரை ஆகிய ஆறு பேரும் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து புறப்பட்டு வந்து மாதத்திற்கு ஒரு மாவட்டமாக தேர்வு செய்து BSNL கேபிள் காப்பர் ஒயர் திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர், இதே போல் நேற்று குழி தோண்டி திருட முயற்சித்த போது கிடைத்த ரகசியத் தகவல் படி அவர்களைப் பிடித்து விசாரிக்க தர்மபுரியில் இருந்து சின்னதுரை என்பவர் உடன் ஒயிட் பொலிரோ வாகனத்தில் வந்து கேபிள் திருட வந்ததை ஒப்புகொண்டார். நகர காவல் நிலைய ஆய்வாளர் கோ. சுகுமாரன் உதவி ஆய்வாளர் காமராஜ் மற்றும் காவல் நிலைய காவலர்களுடன் சேர்ந்து 6 பேரையும் கைது செய்து சிறைக்கு அனுப்பினர். அவர்களிடம் இருந்து சுமார் 10 லட்சம் மதிப்பு ள்ள பொலிரோ பிக் அப் வண்டி ஒன்றும் மற்றும் சம்பவத்துக்கு பயன்படுத்திய கடப்பாரை நான்கு ஐந்து மண்வெட்டிகளை அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது.
புதுகை- BSNL கேபிள் காப்பர் வயர் திருடிய 6 பேர் கைது..

