Skip to content

காதலில் பிறந்த குழந்தை: புதைக்க முயன்ற நர்சிங் மாணவி கைது

புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் வினோதா(21). இவர் இலுப்பூர் மதர்தெரசா நர்சிங் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். நேற்று வினோதாவிற்கு அழகான பெண்குழந்தை பிறந்தது.  அதனை அறிந்த வினோதாவின் தாய் உட்பட உறவினர்கள்  திருமணத்திற்கு முன்பாக குழந்தை பிறந்ததால்  சமுதாயம் தூற்றுமே என கருதி  மயானத்தில் புதைக்க   பிறந்த குழந்தையை எடுத்துச் சென்றனர்.

அதனை பக்கத்து வீட்டில் வசிக்கும் மூதாட்டி பார்த்து அருகிலுள்ள போலீசாரிடம் கூற  இன்ஸ்பெக்டர் கவுரி, மற்றும் போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு  பனையப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.டாக்டர்.
நிர்மலாவதனம்  அவசர சிகிச்சை அளித்து குழந்தையையும், தாய் வினோதாவையும்  புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் கவுரி வழக்குப்பதிந்து விசாரித்தார். முதற்கட்ட விசாரணையில் வினோதா கல்லூரி மாணவர்  ஒருவரை காதலித்து வந்துள்ளார்.  அந்த காதலன் மூலம் கருவுற்றது தெரிய வந்தது.  இதையடுத்து அந்த கல்லூரி மாணவரையும்  கைது போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!