புதுக்கோட்டை மாமன்னர் அரசு கலைக்கல்லூரியின் ஆங்கிலத்துறை தலைவராக பணிபுரிந்தவர் முனைவர் மேரி ஹேமலதா. இவர் பணி நிறைவு பெற்றார். இதையொட்டி அவருக்கு கல்லூரியில் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. மேரி ஹேமலதாவை பாராட்டி, கல்லூரி முதல்வர் முனைவர் புவனேஸ்வரி சால்வை அணிவித்து பாராட்டினார். அப்போது மேரி ஹேமலதாவின் பணி பாராட்டத்தக்கது. மற்ற ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாக அவர் செயல்பட்டார் என்றார். இந்த நிகழ்ச்சியில் சக பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டு முனைவர் மேரி ஹேமலதாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
புதுகை பேராசிரியைக்கு பணி நிறைவு பாராட்டு விழா
- by Authour
