புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை ராமசாமி தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2,பயின்ற மாணவி எஸ். பிரித்திகா 544/600 பெற்று பள்ளி அளவில் முதலிடமும் தாவரவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண்ணும் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்து உள்ளார்.அவருக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் குமார் மற்றும் பாட ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தனர். இரண்டாம் இடம் பெற்ற கே. சௌமியா மற்றும் மூன்றாம் இடம் பெற்ற பி. தேவகி ஆகியோருக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
தாவரவியலில் 100: புதுகை மாணவிக்கு பாராட்டு
- by Authour
