தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் புதுக்கோட்டை விஜயாஇன்று திடீர் ஆய்வு நடத்தினார். , மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா மற்றும் , தலைமையிஆணைய உறுப்பினர்கள் ஆர்.ஜெய சுதா, டாக்டர்.வி.உஷா நந்தினி, வி.செல்வேந்திரன் ஆகியோர் இன்று திடீர் ஆய்வு நடத்தினர்.
பின்னர், ஆணைய தலைவர் புதுக்கோட்டை விஜயா கூறியதாவது:
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மூலம் குழந்தைகள் இல்லங்கள் மற்றும் குழந்தை பாதுகாப்பு தொடர்புடைய இல்லங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளவும், கண்காணித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின்கீழ் செயல்படும், புதுக்கோட்டை மாநகராட்சி, நரிமேடு, அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம், மார்த்தாண்டபுரம் ஆரோக்கியா குழந்தைகள் இல்லம் மற்றும் ராஜகோபாலபுரம், நேசக்கரம் சிறப்பு தத்தெடுத்தல் மையம் ஆகியவைகளின் செயல்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த இல்லங்களில், குழந்தைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள்
குறித்தும், தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு புதுக்கோட்டை விஜயா
கூறினார்.