Skip to content

புதுகை வாலிபர் கொலை…. நிலப்பிரச்னையில் பயங்கரம்

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் எடதெருவை சேர்ந்த முருகேசன் மகன் பிரகாஷ்(28) , திருமணமாகாதவர். இவர் நியூஸ் பேப்பர்களை வீடு வீடாக சென்று போட்டுவிட்டு அதன் பிறகு புதுக்கோட்டை திலகர் திடல் அருகே உள்ள தனியார் தீவன கடையில் பணியாற்றி வந்தார்.

நேற்று மதியம்  இவர் கடையில் இருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் பிரகாஷை கடை முன்பாக தலை மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர். படுகாயம் அடைந்த நிலையில் பிரகாசை அங்கிருந்தவர்கள்  மீட்டுபுதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றிபிரகாஷ் இறந்துபோனார்.
சம்பவ இடத்திற்கு டவுன் டிஎஸ்பி ராகவி மற்றும் டவுன் போலீஸார் விரைந்துவந்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில்,  கொலை செய்யப்பட்ட பிரகாசுக்கும், அவர்களது உறவினருக்கும் நிலப்பிரச்னை இருந்து வந்தது. இதன் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என  போலீசார் கருதுகிறார்கள். இந்த கொலை காரணமாக போலீசார் சிலரை தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!